என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு கலெக்டர் அழைப்பு

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு சேவை புரிந்திட உயர்நோக்கம் கொண்ட அனைத்து தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை பரவலை தடுக்கும் பணியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசுடன் ஒருங்கிணைத்து செயல்படும் வகையில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைத்துள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு சேவை புரிந்திட உயர்நோக்கம் கொண்ட அனைத்து தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.

    உங்கள் தொண்டு நிறுவனத்தின் விவரங்கள் மற்றும் தங்களால் இயன்ற உதவிகள் மற்றும் சேவைகளின் விவரங்களை https://ucc.uhcitp.in/ngoregistration என்ற இணைய தளத்தில் பதிவு செய்து இந்த பெரும் பணியில் தங்களை ஈடுபடுத்தி கொள்ளுங்கள். கூடுதல் தகவல்களுக்கு காஞ்சீபுரம் மாவட்டத்தில் செயல்படும் ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினரான மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×