search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடுப்பூசி போடுவதற்காக ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்த காட்சி.
    X
    தடுப்பூசி போடுவதற்காக ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்த காட்சி.

    கொரோனா தடுப்பூசி மையங்களில் ஆர்வத்துடன் திரளும் மக்கள்

    கொரோனா தடுப்பூசி மையங்களில் ஏராளமானோர் ஆர்வத்துடன் தடுப்பூசி போட வருகின்றனர். ஆனால் இங்கு சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    ராஜபாளையம்:

    கொரோனாவை வெல்ல பேராயுதமாக தடுப்பூசி உள்ளது. எனவே தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை மக்கள் இயக்கமாக செய்திட தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதனிடையே ராஜபாளையம் நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி மையங்களில் நேற்று வரை 35 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    ராஜபாளையத்தில் அங்குள்ள சமுதாய சாவடியில் வைத்து தடுப்பூசி போடுவதால் அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

    ஆனால் அங்கு சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாத நிலையே உள்ளது. இதனால் கொரோனா பரவும் அபாயம் ஏற்படுகிறது. கொரோனாவை தடுக்க தடுப்பூசி போடுவது முக்கியமானதுதான். ஆனால் தடுப்பூசி போடுவதற்காக வருவோர் சமூக இடைவெளியை கடைபிடிப்பதும் மிக அத்தியாவசியமானதாகும்.

    எனவே தடுப்பூசி போடும் மையங்களில் மக்கள் கூடுவதை தடுக்க பல இடங்களில் முகாமை பிரித்து நடத்திட வேண்டும். மேலும் தடுப்பூசி மையங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×