என் மலர்tooltip icon

    செய்திகள்

    2ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
    X
    2ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

    புயல் எச்சரிக்கை- துறைமுகத்தில் 2ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

    புதுச்சேரி துறைமுகத்தில் நேற்று 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று புதுச்சேரி மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
    புதுச்சேரி:

    வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளது. ‘யாஸ்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலானது இன்று (செவ்வாய்க் கிழமை) மாலை மேற்கு வங்காளம் மற்றும் வடக்கு ஒடிசா பகுதியில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இந்தப் புயலின் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையொட்டி புதுச்சேரி துறைமுகத்தில் நேற்று 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று புதுச்சேரி மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
    Next Story
    ×