என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விருத்தாசலம் அருகே பெண் கற்பழித்து கொலை
Byமாலை மலர்16 May 2021 8:44 AM GMT (Updated: 16 May 2021 8:44 AM GMT)
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் சரகம் வண்ணான் குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 48). அவரது மனைவி சின்னப்பிள்ளை (45). இவர்கள் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு தமிழரசன் (24) என்ற மகன் உள்ளார்.
கடந்த 14-ந் தேதி வீட்டை விட்டு சென்ற சின்னப்பிள்ளை அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த ரவிச்சந்திரன், தனது மனைவியை உறவினர்கள் வீடு, மற்றும் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார்.
ஆனால், எங்கு தேடியும் சின்னப்பிள்ளை கிடைக்கவில்லை. நேற்று அதே பகுதியில் உள்ள மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் பெண் ஒருவர் பிணமாக கிடந்தார்.
இதனையறிந்த அப்பகுதி விவசாயிகள் கருவேப்பிலங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் டி.எஸ்.பி. மோகன், இன்ஸ்பெக்டர் விஜயரங்கன், கருவேப்பிலங்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் அந்த கரும்பு தோட்டத்துக்கு விரைந்தனர்.
அப்போது அந்த பெண் அரை நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணையை முடுக்கினர். அதில், பிணமாக கிடந்தவர் காணாமல் போன ரவிச்சந்திரனின் மனைவி சின்னப்பிள்ளை என்பது தெரியவந்தது.
சின்னப்பிள்ளையின் உடலில் ரத்தக்காயங்கள் இருந்தது. எனவே, யாரோ அவரை கற்பழித்து கொன்று உடலை கரும்பு தோட்டத்தில் வீசி விட்டு சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். அதனடிப்படையில், கொலை செய்த மர்ம நபர் யார்? அவர் எங்கு பதுங்கி உள்ளார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சின்னப்பிள்ளையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
Next Story
×