search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வேலூர் மாவட்டத்தில் 723 பேருக்கு கொரோனா தொற்று

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனைக் கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் கடந்த சில நாட்களாக 500-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகி வருகிறது.

    வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 698 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்றைய பரிசோதனை முடிவில் மேலும் 723 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், உடன் பணிபுரிந்த அனைவரும் உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பின்னர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். வேலூர் மாநகராட்சி பகுதியில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரிக்கிறது. 400-க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

    வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 33 ஆயிரத்து 41 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 28 ஆயிரத்து 657 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்தனர். 454 பேர் உயிரிழந்தனர். 3,933 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று முன்தினம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    காட்பாடி தாலுகாவில் நேற்று 121 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதியில் 101 பேரும், கிராமப் பகுதியில் 18 பேரும், பேரூராட்சி பகுதியில் 2 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×