search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஸ்டெர்லைட் ஆக்சிஜன் முழுவதும் தமிழகத்திற்குத்தான்- ஆட்சியர்

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, தற்போது விநியோகமும் தொடங்கி உள்ளது.
    தூத்துக்குடி: 

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜனை விநியோகிக்கும் பணி இன்று காலை தொடங்கியது. இப்பணியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆக்சிஜன் நிரப்பிய முதல் கண்டெய்னர் லாரி போலீஸ் பாதுகாப்புடன் ஸ்டெர்லைட்டில் இருந்து புறப்பட்டது. 

    இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கூறியதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, தற்போது விநியோகமும் தொடங்கி உள்ளது. 4.820 டன் ஆக்சிஜன் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. முதல்கட்டமாக 3 முதல் 5 நாட்களுக்கு 10 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும். 

    சிலநாட்களில் 35 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வாய்ப்பு உள்ளது. ஸ்டெர்லைட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் அனைத்தும் தமிழகத்திற்கே விநியோகம் செய்யப்பட்டும். 

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×