என் மலர்
செய்திகள்

முக ஸ்டாலின்
மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நம்பிக்கை
தொழில்துறையினருடன் இன்று மாலை ஆலோசனை நடத்திய முக ஸ்டாலின், மீண்டும் ஊரடங்கு நிலை ஏற்பட்டால் தொழில்நிறுவனங்களுடன் ஆலோசிக்கப்படும் என்றார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் நாளை முதல் வருகிற 24-ந்தே வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மூடப்படும்.
கொரோனாவை கட்டுப்படுத்த முதலமைச்சர் முக ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இன்று அமைச்சர்கள் கூட்டத்தை கூட்டி முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்த நிலையில் சென்னை தலைமையகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தொழில்துறையினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமை செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், மீண்டும் ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை. அப்படியொரு நிலை ஏற்பட்டால் தொழில்துறை நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Next Story