என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்கள் முககவசம் அணிந்து இலவச பயணம் மேற்கொண்டதை படத்தில் காணலாம்.
    X
    பெண்கள் முககவசம் அணிந்து இலவச பயணம் மேற்கொண்டதை படத்தில் காணலாம்.

    தர்மபுரி மாவட்டத்தில் 104 டவுன் பஸ்களில் பெண்கள் இலவச பயணம்

    தர்மபுரி மாவட்டத்தில் 104 அரசு டவுன் பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொண்டனர்.
    தர்மபுரி:

    முதல்-அமைச்சராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, அரசு டவுன் பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என்று அரசாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி நகரம் உள்ளிட்ட அனைத்து கிராமங்களுக்கும் நேற்று காலை முதல் இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொண்டனர்.

    ஒவ்வொரு டவுன் பஸ்களின் முன்புறம் பெண்களுக்கு இலவச பயணம் என்று அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 50 சதவீத பயணிகள் மட்டுமே பஸ்களில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் பெரும்பாலான டவுன் பஸ்கள் பெண் பயணிகளுடன் அந்தந்த கிராமங்களுக்கு இயக்கப்பட்டது. மேலும் பெண்கள் முககவசம் அணிந்து மகிழ்ச்சியுடன் இலவச பயணம் மேற்கொண்டனர்.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தர்மபுரி கிளையில் 47 டவுன் பஸ்களும், பென்னாகரம் கிளையில் 21 டவுன் பஸ்களும், அரூர் கிளையில் 12 டவுன் பஸ்களும், பாலக்கோடு கிளையில் 20 டவுன் பஸ்களும், பொம்மிடி கிளையில் 4 டவுன் பஸ்களும் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 104 அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த டவுன் பஸ்களில் நேற்று முதல் பெண்கள் இலவச பயணம் செய்தனர்.

    தர்மபுரி மண்டல அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் மோகன், பொது மேலாளர் ஜீவரத்தினம் ஆகியோர் மேற்பார்வையில் கிளை மேலாளர்கள் செல்வராஜ், ஜெயப்பிரகாஷ், நித்தியானந்தம், மணிவண்ணன், கிருஷ்ணன் மற்றும் போக்குவரத்து கழக ஆய்வாளர்கள் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்கிறார்களா? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.
    Next Story
    ×