என் மலர்
செய்திகள்

மருந்தகத்திற்கு சீல்
டாக்டர் பரிந்துரை இன்றி மருந்து விற்ற மருந்தகத்திற்கு சீல்
சிங்கம்புணரி பஸ் நிலையம் முன்புறம் உள்ள ஒரு மருந்து கடையில் டாக்டர் பரிந்துரையின்றி மருந்துகள் வினியோகித்தது தெரிய வந்தது.
சிங்கம்புணரி:
சிங்கம்புணரி தாலுகாவில் தாசில்தார் திருநாவுக்கரசு தலைமையில் அதிகாரிகள் நேற்று கொரோனா விதிமுறைகளை வியாபாரிகள் கடைபிடிக்கிறார்களா? என ஆய்வு செய்தனர். கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அப்போது சிங்கம்புணரி பஸ் நிலையம் முன்புறம் உள்ள ஒரு மருந்து கடையில் டாக்டர் பரிந்துரையின்றி மருந்துகள் வினியோகித்தது தெரிய வந்தது. அதோடு முககவசம், கையுறை இன்றி வாடிக்கையாளர்களுக்கு மருந்துகள் வழங்கி கொண்டிருந்தார். வாடிக்கையாளர்களும் முககவசம் இன்றி, சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மருந்து வாங்கி கொண்டு இருந்தனர். இதையடுத்து அந்த மருந்து கடையை தாசில்தார் சீல் வைக்க உத்தரவிட்டார். அதன்படி அந்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Next Story