search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர்களை படத்தில் காணலாம்.
    X
    ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர்களை படத்தில் காணலாம்.

    கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள்

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைக்கப்பட்டு உள்ளன.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைக்கப்பட்டு உள்ளன. மேலும், தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்களிலும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பு வைக்கப்பட்டன.

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்படுபவர்களுக்கு பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி, அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் ஆஸ்பத்திரிகள் ஆகிய இடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில்உள்ள தற்காலிக சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    கொரோனா தொற்றுக்கு புதிதாக பாதிக்கப்படுபவர்கள் கொரோனா பரிசோதனை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அங்கு நோயின் தன்மை கண்டறியப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். நோயின் தாக்கம் குறைவாக இருந்தால், தற்காலிக சிகிச்சை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

    கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் ஆஸ்பத்திரிகளில் போதுமான அளவு ஆக்சிஜன் சிலிண்டர்களை இருப்பு வைத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.தற்காலிக சிகிச்சை மையங்களில் ஆக்சிஜன் வசதி இல்லாமல் இருந்தது. இதனால் ஆக்சிஜன் வசதி தேவைப்படும் நோயாளிகளை ஆம்புலன்ஸ் மூலமாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இந்தநிலையில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து தற்காலிக சிகிச்சை மையங்களிலும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தயார் நிலையத்தில் வைத்திருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறைக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் உத்தரவிட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து 11 பயிற்சி தற்காலிக மையங்களிலும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பு வைக்கப்பட்டன. இதேபோல் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் ஆக்சிஜன் சிலிண்டர் இருப்பு வைக்கப்பட்டு, தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
    Next Story
    ×