என் மலர்
செய்திகள்

பொதுமக்கள் சீர்காழி உதவி கலெக்டர் நாராயணனிடம் மனு கொடுக்க வந்த போது எடுத்த படம்.
இறால் குட்டை அமைக்க தடை விதிக்க வேண்டும்- உதவி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
சீர்காழி அருகே கீராநல்லூரில் இறால் குட்டை அமைக்க தடை விதிக்க வேண்டும் என்று சீர்காழி உதவி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஒன்றியம் திருக்கருக்காவூர் ஊராட்சிக்கு உட்பட்ட கீராநல்லூர் கிராமம் உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் குடியிருப்புக்கு அருகில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் இறால் குட்டை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகின்றது.
இந்த பகுதியில் இறால் குட்டை அமைந்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும், குடிநீர் உப்பு நீராக மாறி குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாலும் உடனடியாக இறால் குட்டை அமைக்கும் பணியினை தடுத்து நிறுத்த வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்
இந்நிலையில் நேற்று கீராநல்லூர் கிராமத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சீர்காழி உதவி கலெக்டர் நாராயணனிடம் கீராநல்லூரில் இறால் குட்டை அமைக்க தடை விதிக்க வேண்டும் என கோரி மனு கொடுத்தனர்.
அப்போது அவர்களிடம் உதவி கலெக்டர் விரைவில் இரு தரப்பையும் கூட்டி அமைதி பேச்சுவார்த்தை நடத்தி நல்ல தீர்வு காணப்படும் எனக் கூறினார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றனர்.
Next Story






