என் மலர்
செய்திகள்

கைது
கீழ்பென்னாத்தூர் அருகே பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் கைது
கீழ்பென்னாத்தூர் அருகே 15 வயது பள்ளி மாணவியை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கீழ்பென்னாத்தூர்:
கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள சோ.பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது மாணவி. 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் வீட்டில் இருந்து திடீரென மாயமானார். அவரை பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் கழிகுளம் கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் (வயது 26) என்பவர் தனது மகளை கடத்தி சென்று விட்டதை அறிந்த மாணவியின் தாய் கீழ்பென்னாத்தூர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து, மாணவியை மீட்டனர். மேலும் பிரசாந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






