என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வேலூர் மாவட்டம் முழுவதும் 297 பேருக்கு கொரோனா பாதிப்பு

    வேலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் குறைவாக காணப்பட்ட கொரோனா தற்போது 200-ஐ தாண்டி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று வெளியான முடிவில் 297 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. அதில் வேலூர் மாநகர பகுதியில் மட்டும் 150-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலும் சிகிச்சைக்காக வந்த வெளிமாநிலத்தவர்கள் 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செதுக்கரை, பள்ளூர், பிச்சனூர், அணைக்கட்டு, பள்ளிகொண்டா, செதுவாலை பகுதிகளிலும் புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனாவை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×