search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சிவகங்கை மாவட்டத்தில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

    சிவகங்கை மாவட்டத்தில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.. எனவே மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில் அந்தந்த பகுதியில் சுகாதார துறை மருத்துவர்கள் காய்ச்சல் தடுப்பு முகாமை நடத்தி வருகின்றனர். மேலும், தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    இதேபோன்று, சிவகங்கை நகரின் முக்கிய பகுதிகளான அரண்மனை வாசல், தொண்டி சாலை, மதுரை விலக்கு சாலை, மதுரை சாலையில் உள்ள சோதனை சாவடி, திருப்பத்தூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அப்போது முக கவசம் அணியாமல் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் நபர்களை தடுத்து நிறுத்தி ரூ.200 அபராதம் விதித்து வருகின்றனர். இதுதவிர, பொதுமக்களிடம் சமூக இடைவெளியை பின்பற்றி கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகின்றனர். இதுதவிர, மாவட்டத்தின் எல்கையான மணலூர், பூவந்தி, மானாமதுரை, எஸ்.எஸ்.கோட்டை, கானாடுகாத்தான், இளையான்குடி ஆகிய பகுதிகளிலும் போலீசார் வாகனச் சோதனை நடத்தி முக கவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். இதன்காரணமாக பெரும்பாலான வாகனங்களில் வருவோர் முககவசம் அணிந்து வருகின்றனர்.

    Next Story
    ×