search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு உயர்நிலைப்பள்ளியில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றதை படத்தில் காணலாம்.
    X
    அரசு உயர்நிலைப்பள்ளியில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றதை படத்தில் காணலாம்.

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வாக்குச்சாவடியாக செயல்பட்ட பள்ளிகளில் கிருமிநாசினி தெளிப்பு தீவிரம்

    கொரோனா 2-வது அலையாக வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து இன்று (சனிக்கிழமை) முதல் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு கடைப்பிடிக்க மத்திய அரசு அறிவித்துள்ளது
    காரைக்குடி:

    நாடு முழுவதும் தற்போது கொரோனா 2-வது அலையாக வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கிய இந்த கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து கொரோனா பரவல் குறைய தொடங்கியதை அடுத்தடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

    இந்தநிலையில் தற்போது கொரோனா 2-வது அலையாக வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து இன்று (சனிக்கிழமை) முதல் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு கடைப்பிடிக்க மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தநிலையில் கடந்த 6-ந்தேதி தமிழகம் முழுவதும் சட்ட மன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் போது தமிழகத்தில் உள்ள பள்ளிகள் வாக்குச்சாவடி மையங்களாக செயல்பட்டன. இதையடுத்து இந்த வாக்குச் சாவடி மையத்திற்கு வாக்கு செலுத்துவதற்காக ஏராளமாக பொதுமக்கள் வந்து சென்றனர்.

    இதுதவிர மாலை 6 மணி முதல் 7 மணி வரை கொரோனா நோயாளிகள் வாக்களிப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டு அவர்களும் வந்து வாக்களித்து சென்றனர். இதையடுத்து இந்த வாக்குச்சாவடியாக செயல்பட்ட பள்ளிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்க உத்தரவிடப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக கடந்த 2 நாட்களாக சிவகங்கை மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களாக செயல்பட்ட அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் அந்தந்த நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி சார்பில் அதன் பணியாளர்கள் பள்ளிகள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.. காரைக்குடி ராமநாதன்செட்டியார் அரசு உயர்நிலைப்பள்ளியிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடந்தது.

    மேலும் வருகிற 3-ந்தேதி முதல் பிளஸ்-2 மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதையடுத்து பள்ளி முகப்பு பகுதி, வாக்குச்சாவடி மையம் செயல்பட்ட அறை, தலைமை ஆசிரியர் அறை, வரவேற்பு அறை மற்றும் பள்ளியை சுற்றிலும் கிருமி நாசினி தெளிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த பணிகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் நேரடியாக வந்து பார்வையிட்டனர்.
    Next Story
    ×