என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  கோபிசெட்டிபாளையம் பகுதியில் மின்தடையால் 5 நிமிடம் தாமதமாக தொடங்கிய வாக்குப்பதிவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோபி தொகுதிக்குட்பட்ட நம்பியூர் பேரூராட்சி காந்திபுரம் தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அரைமணி நேரம் தாமதமாக ஓட்டுப்பதிவு தொடங்கியது.

  கோபி:

  ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று காலை 6 மணி முதலே வாக்களிக்க பொதுமக்கள் திரண்டனர். இந்நிலையில் சரியாக 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்க வேண்டிய நேரத்தில் திடீரென மின்தடை ஏற்பட்டது.

  இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் மின்வாரியத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் கோபி அருகே உள்ள ஓலப்பாளையம் துணைமின் நிலையத்தில் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு அணில் டிரான்ஸ்பார்மரில் சிக்கியதால் மின்தடை ஏற்பட்டது தெரியவந்தது.

  இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு அந்த அணிலை அப்புறப்படுத்தி மீண்டும் மின்இணைப்பை கொடுத்தனர்.

  இதனால் கோபி டவுன் பகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 7.05 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மின்தடை காரணமாக 5 நிமிடம் தாமதமாக கோபி டவுன் பகுதியில் ஓட்டுப்பதிவு தொடங்கியது குறிப்பிடத் தக்கது.

  இதேபோல் கோபி தொகுதிக்குட்பட்ட நம்பியூர் பேரூராட்சி காந்திபுரம் தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அரைமணி நேரம் தாமதமாக 7.30 மணிக்குத்தான் ஓட்டுப்பதிவு தொடங்கியது.

  Next Story
  ×