search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்காளர் பட்டியல்
    X
    வாக்காளர் பட்டியல்

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி தீவிரம்

    கிருஷ்ணகிரியில் 2 லட்சத்து 65 ஆயிரத்து 238 பேரும், வேப்பனப்பள்ளியில் 2 லட்சத்து 50 ஆயிரத்து 657 பேரும் வாக்களிக்க உள்ளனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில், ஊத்தங்கரையில் 12 பேரும், பர்கூரில் 14 பேரும், கிருஷ்ணகிரியில் 15 பேரும், தளியில் 12 பேரும், ஓசூரில் 18 பேரும், வேப்பனப்பள்ளியில் 15 பேரும் என மொத்தம் 86 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களுக்கான தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

    இதில், ஊத்தங்கரையில் 2 லட்சத்து 37 ஆயிரத்து 51 பேரும், பர்கூரில் 2 லட்சத்து 46 ஆயிரத்து 269 பேரும் வாக்களிக்க உள்ளனர். இதேபோல் கிருஷ்ணகிரியில் 2 லட்சத்து 65 ஆயிரத்து 238 பேரும், வேப்பனப்பள்ளியில் 2 லட்சத்து 50 ஆயிரத்து 657 பேரும் வாக்களிக்க உள்ளனர். ஓசூரில் 3 லட்சத்து 49 ஆயிரத்து 224 பேரும், தளியில் 2 லட்சத்து 50 ஆயிரத்து 579 பேர் என மொத்தம் 15 லட்சத்து 99 ஆயிரத்து 18 பேர் வாக்களிக்க உள்ளனர்.

    இதற்காக 2,258 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஊத்தங்கரையில் 56 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதே போல், பர்கூரில் 70-ம், கிருஷ்ணகிரியில் 98-ம், வேப்பனப்பள்ளியில் 39-ம், ஓசூரில் 120-ம், தளியில் 43-ம் என மொத்தம் 426 பதற்றமான வக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன.

    இங்கு கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று 150-க்கும் மேற்பட்ட நகராட்சி பணியாளர்கள், கிருஷ்ணகிரியில் உள்ள 33 வார்டுகளிலும் வீடு, வீடாக சென்று பூத் சிலிப் வழங்கி வருகின்றனர். இன்றும் (திங்கட்கிழமை) இந்த பணி நடக்கும் என தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×