search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    காட்பாடியில் பறக்கும் படை சோதனையில் 60 மதுபாட்டில்கள் பறிமுதல் - 2 பேர் கைது

    தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
    காட்பாடி:

    தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதனால் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 6-ந்தேதி வரை டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று காட்பாடி பெரியபுதூரில் பறக்கும் படை அலுவலர் வேலாயுதம் தலைமையில் குழுவினர் சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை நிறுத்தி சோதனை செய்த போது அவர்களிடம் 60 மதுபாட்டில்கள் இருந்தன. டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என அறிவித்ததால் அவர்கள் மொத்தமாக வாங்கிச் செல்வது தெரியவந்தது.

    இதுகுறித்து காட்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வண்டறந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த ராம்குமார் (வயது 32), ராமன் (35) ஆகியோரை கைது செய்தனர்.

    தகவலறிந்த மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சண்முகசுந்தரம் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.
    Next Story
    ×