search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கீரப்பாளையம் கிழக்கு ஒன்றியத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் அருண்மொழிதேவன் வாக்கு சேகரித்தபோது போது எடுத்த படம்.
    X
    கீரப்பாளையம் கிழக்கு ஒன்றியத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் அருண்மொழிதேவன் வாக்கு சேகரித்தபோது போது எடுத்த படம்.

    இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் - புவனகிரி அ.தி.மு.க. வேட்பாளர் பேச்சு

    இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று புவனகிரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அருண்மொழிதேவன் பேசினார்.
    புவனகிரி:

    புவனகிரி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் நேற்று கீரப்பாளையம் கிழக்கு ஒன்றியமான துணிசிரமேடு ஊராட்சியில் வாக்கு சேகரித்தார். முன்னதாக துணிசிமேடு கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு பிரசாரத்தை தொடங்கிய அவர் பொதுமக்கள் மத்தியில் பேசுகையில், தமிழகத்தில் மீண்டும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைய வேண்டும். அவருடைய ஆட்சி மீண்டும் அமைந்தால் தேர்தல் வாக்குறுதியில் அவர் சொன்னபடி ஆண்டுக்கு 6 சிலிண்டர், குடும்ப தலைவிக்கு ரூ.1,500 ரொக்கம், வாஷிங் மிஷின் உள்ளிட்ட அனைத்தையும் செய்து கொடுப்பார். மேலும் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் புவனகிரி தொகுதியின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பேன் என்றார். தொடர்ந்து அவர் கீரப்பாளையம் கிழக்கு ஒன்றியத்தில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

    இதில் கீரப்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் விநாயகமூர்த்தி, மாவட்ட பேரவை செயலாளர் உமாமகேசுவரன், மாவட்ட துணை செயலாளர் வக்கீல் முருகுமணி, மாணவரணி தலைவர் வீரமூர்த்தி, மாவட்ட தொழில் நுட்ப பிரிவு தலைவர் புருஷோத்தமன், துணிசிரமேடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிங்கார ராமமூர்த்தி, அ.தி.மு.க. நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், அண்ணாதுரை, அன்பழகன், ராமலிங்கம், ரங்கநாதன், முருகையன், ரவிச்சந்திரன், நடேசன், எழிலரசன், கோவிந்தராஜ், ஜெயலட்சுமி, ரம்யா, சிவராஜ், பா.ம.க. ஒன்றிய செயலாளர் ஹரிபுத்திரன். மாவட்ட துணை செயலாளர் இளையராஜா, பொதுச்செயலாளர் அருள் கோவிந்தன், பா.ஜ.க. கட்சியை சேர்ந்த ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×