என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.எம்.சுகுமார் மசூதி அருகில் வாக்கு சேகரித்த காட்சி.
    X
    அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.எம்.சுகுமார் மசூதி அருகில் வாக்கு சேகரித்த காட்சி.

    வேலூரில் உள்ள மசூதிகளுக்கு தலா ரூ.6 லட்சம் ஒதுக்கீடு செய்வேன் - அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.கே.அப்பு வாக்குறுதி

    வேலூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.கே.அப்பு பாக்கியாத் தெருவில் உள்ள பெரிய மசூதி மற்றும் சின்ன மசூதியில் நேற்று தொழுகை முடித்து வந்த முஸ்லிம்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
    வேலூர்:

    வேலூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.கே.அப்பு பாக்கியாத் தெருவில் உள்ள பெரிய மசூதி மற்றும் சின்ன மசூதியில் நேற்று தொழுகை முடித்து வந்த முஸ்லிம்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    இஸ்லாமிய மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் ஆட்சி தான் அ.தி.மு.க. ஆட்சி. இந்த தேர்தலில் நான் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானால் உங்களுடைய குறைகளை நிவர்த்தி செய்வேன். நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவேன்.

    வேலூர் நகரில் உள்ள ஒவ்வொரு மசூதிக்கும் தலா ரூ.6 லட்சம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்து அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பேன்.

    வேலூரில் உள்ள உருது பள்ளிக்கு ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் கிடைக்க வழிவகை செய்வேன். எனவே எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தின்போது அ.தி.மு.க. மாவட்ட பொருளாளர் எம்.மூர்த்தி, பகுதி செயலாளர் அன்வர்பாஷா, சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் மொய்தீன், வட்ட செயலாளர் அண்ணாமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×