என் மலர்

  செய்திகள்

  பணம் பறிமுதல்
  X
  பணம் பறிமுதல்

  வேலூர் சத்துவாச்சாரியில் ஓட்டுக்கு கொடுக்க இருந்த ரூ. 54 ஆயிரம் பறிமுதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வேலூர் மாவட்டம் முழுவதும் 24 மணி நேரமும் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். அணைக்கட்டு மற்றும் காட்பாடி தொகுதியில் வாக்காளர்களுக்கு ஓட்டு போடுவதற்காக கொடுக்க இருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
  வேலூர்:

  வேலூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் பரிசுப் பொருட்களைக் கொண்டு செல்வதை தடுக்க பறக்கும் படை நிலை கண்காணிப்பு குழுவினர் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

  அவர்கள் மாவட்டம் முழுவதும் 24 மணி நேரமும் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.அணைக்கட்டு மற்றும் காட்பாடி தொகுதியில் வாக்காளர்களுக்கு ஓட்டு போடுவதற்காக கொடுக்க இருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

  இந்த நிலையில் நேற்று இரவு வேலூர் சத்துவாச்சாரி வ.உ.சி நகரில் வீடு வீடாக வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக தகவல் வந்தது‌ .இதையடுத்து பறக்கும்படை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு தெருவில் நின்று கொண்டிருந்த 2 பேர் கையில் வைத்திருந்த பையை போட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர்.

  அவர்கள் வீசி சென்ற பையில் ரூ. 54,070 பணம் இருந்தது. அதிகாரிகள் அதனைக் கைப்பற்றி சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தப்பி ஓடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
  Next Story
  ×