என் மலர்tooltip icon

    செய்திகள்

    வருமான வரித்துறை
    X
    வருமான வரித்துறை

    அந்தியூர் அருகே தனியார் பள்ளியில் வருமான வரித்துறை சோதனை

    சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

    அந்தியூர்:

    சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும் வாக்காளர்களுக்கு, பணம், பரிசு பொருட்கள் விநியோகம் செய்வது குறித்த தகவலின் பேரிலும் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசனின் உறவினர் வீட்டில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில் எதும் கைப்பற்றப்படவில்லை.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள தோப்பூர் பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியை அ.தி..மு..க. வைச் சேர்ந்த 13 பேர் நிர்வகித்து வருகிறார்கள். அமைச்சர் செங்கோட்டையன் இந்த பள்ளிக்கு கடந்த 2 நாட்களாக தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த வந்து சென்றார். இந்தநிலையில் இந்த பள்ளியில் பணம் பட்டுவாடா செய்வதாக கிடைத்த தகவலின் பெயரில் வருமான வரித்துறையினர் மற்றும் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×