என் மலர்
செய்திகள்

பணியிடை நீக்கம்
வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்த அரசு பஸ் கண்டக்டர் பணியிடை நீக்கம்
வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்த அரசு பஸ் கண்டக்டர் பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்து கழக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
வேலூர்:
வேலூர் அருகே தெள்ளூர் பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக கடந்த 31-ந் தேதி இரவு மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் சென்றது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் பறக்கும்படை அதிகாரிகள் அங்கு விரைந்தனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தவர்கள் அதிகாரிகளை பார்த்ததும் தப்பிச் சென்றனர். அதில் 2 பேரை அதிகாரிகள் பிடித்தனர். அவர்களிடம் ரூ.17 ஆயிரம் மற்றும் தி.மு.க.வின் தேர்தல் துண்டு பிரசுரங்களும் இருந்தன.
விசாரணையில் அவர்கள் அலமேலுமங்காபுரத்தை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டரான கார்த்திபன் (வயது 51), தெள்ளூரை சேர்ந்த ராமமூர்த்தி (56) ஆகியோர் என்பது தெரியவந்தது. பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் கார்த்திபன் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்து கழக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Next Story