என் மலர்
செய்திகள்

வீரமுடையான்நத்தம் பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் அருண்மொழிதேவன் வாக்கு சேகரித்தபோது எடுத்த படம்.
புவனகிரி மேற்கு ஒன்றியத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் அருண்மொழிதேவன் வாக்கு சேகரிப்பு
புவனகிரி மேற்கு ஒன்றியத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் அருண்மொழிதேவன் வாக்கு சேகரித்தார்.
புவனகிரி:
புவனகிரி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக அக்கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் போட்டியிடுகிறார். இவர் தனது கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.
அந்த வகையில் அ.தி.மு.க. வேட்பாளர் அருண்மொழிதேவன் நேற்று புவனகிரி மேற்கு ஒன்றியத்துக்குட்பட்ட வீரமுடையான்நத்தம், சின்னக்குப்பம், பெரியகுப்பம், ஆதனூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளுக்கு சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு பெண்கள், பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும் உற்சாகமாக வரவேற்றனர்.
தொடர்ந்து வேட்பாளர் அருண்மொழிதேவன் பேசுகையில், புவனகிரி தொகுதியில் உங்களை நம்பி போட்டியிடுகிறேன். எனவே இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள் என்றார்.
இதில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் இளஞ்செழியன், முன்னாள் பா.ம.க. மாவட்ட தலைவர் சிட்டி பாபு, ஒன்றிய செயலாளர் சங்கர், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வட்டார தலைவர் கலைவாணன், அ.தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், மாவட்ட துணை செயலாளர் முருகுமணி, மாவட்ட பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், பேரவை தலைவர் வீரமூர்த்தி, அ.தி.மு.க. ஊராட்சி செயலாளர் ஜெயசீலன், ராஜசேகர், வெங்கடராமன் முருகேசன், கோவிந்தராஜ், பிரகாஷ், ராஜேஸ்வரி, வேல்முருகன், ராமலிங்கம், ஜெயவேல், வீராசாமி, இந்திரா, பிருதிவி உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story






