என் மலர்
செய்திகள்

கம்மாபுரம் வடக்கு ஒன்றிய பகுதியில் தே.மு.தி.க. வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் வாக்கு சேகரித்த போது எடுத்த படம்.
விருத்தாசலம் தொகுதியில் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும் - தே.மு.தி.க. வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் உறுதி
விருத்தாசலம் தொகுதியில் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும் என்று தே.மு.தி.க. வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் உறுதியளித்தாா்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணி சார்பில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று முரசு சின்னத்துக்கு ஆதரவு திரட்டி வருகிறார். மேலும் இவருக்கு ஆதரவாக இவருடைய மகன் விஜயபிரபாகரன் மற்றும் கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரித்து வருகின்றனர். அந்த வகையில் தே.மு.தி.க. வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று கம்மாபுரம் வடக்கு ஒன்றியத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இருப்பு அரசியம்மன் கோவிலில் இருந்து பிரசாரத்தை தொடங்கிய அவர், செடுத்தான்குப்பம், கிழக்கிருப்பு, வடக்கிருப்பு, தெற்கிருப்பு, மேற்கிருப்பு, நாச்சி வெள்ளையன்குப்பம், முடப்புளி, நடியப்பட்டு, பாலக்கொள்ளை, மணக்கொள்ளை, இருளக்குறிச்சி, பழையபட்டினம் உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று முரசு சின்னத்துக்கு ஆதரவு திரட்டி வாக்கு சேகரித்தார். அப்போது ஒவ்வொரு கிராமங்களிலும் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் பொதுமக்களிடம் பேசுகையில், பொதுமக்களின் குடிநீர் பிரச்சினையை உடனுக்குடன் தீர்க்கவும், அனைத்து அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கவும் முரசு சின்னத்துக்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.
இதில் ஒன்றிய செயலாளர் தங்க பொன் தனசேகர் தலைமையில், தொகுதி பொறுப்பாளர் எ.பி.ராஜ், ஒன்றிய தலைவர் தனஞ்செயன், பொருளாளர் சக்திவேல், மாவட்ட கேப்டன் மன்றம் சக்திவேல், ஒன்றிய செயலாளர்கள் அ.ம.மு.க. வேல்முருகன், தமிழர் விடுதலை புலி பாஸ்கர், தே.மு.தி.க. இளைஞர் அணி யூகின்ராஜ், முருகன், தேவேந்திரன், நிர்வாகிகள் பாலமுருகன், பாஸ்கர், வெற்றிச்செல்வன், ஆலடி பழனிவேல், பிரகாஷ், செல்வராஜ், திருவெங்கடம், மணிகண்டன், கோதண்டம், விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டு பிரேமலதா விஜயகாந்துக்கு ஆதரவாக முரசு சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர்.
Next Story






