search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நம்பியூரில் நடந்த பிரசாரத்தில் தி.க. பிரமுகரை கல்வீசி தாக்கிய இந்து முன்னணி பொறுப்பாளர் உள்பட 3 பேர் கைது

    நம்பியூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் தி.க. பிரமுகரை கல்வீசி தாக்கிய இந்து முன்னணி பொறுப்பாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 5 ேபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
    நம்பியூர்:

    கோபி சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட நம்பியூரில் நேற்று முன்தினம் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு கோபி சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் மணிமாறனை ஆதரித்து வாக்குகள் கேட்டு பேசினார். பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது திராவிடர் கழக மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வெற்றிவேல் என்பவர் ஏன் தி.மு.க.வை ஆதரிக்க வேண்டும்? என்ற புத்தகத்தை அந்த பகுதியில் விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சிலர் இந்த புத்தகத்தை இ்ங்கு எதற்கு விற்கிறாய் என கேட்டதுடன், தகாத வார்த்தையால் திட்டியும் உள்ளனர். மேலும் அங்கிருந்த கல்லை எடுத்து வீசி வெற்றிவேலை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

    இதில் வெற்றிவேல் காயம் அடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் வெற்றிவேலை மீட்டு சிகிச்சைக்காக நம்பியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் நம்பியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வெற்றிவேலை கல்லால் தாக்கியதாக இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளரான நம்பியூர் அருகே உள்ள கொடாரையை சேர்ந்த பழனிசாமி, நிர்வாகிகள் விக்னேஷ், கார்த்தி ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    மேலும் இது தொடர்பாக 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×