என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    பல்லாவரம் அருகே அக்காள் கணவரின் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட வாலிபர் கொலை

    பல்லாவரம் அருகே அக்காள் கணவரின் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    தாம்பரம்:

    பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர் நேரு நகர் கண்ணகி தெருவில் மேற்கு வங்கத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி பாயேஸ் அலி (25) தனது மனைவி மற்றும் கை குழந்தையுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

    மற்றொரு கட்டிட தொழிலாளி ஆதிமூலம் (44), அவரது மனைவி அமுதா மற்றும் மகன் நித்திஸ் என்கிற அப்பு ஆகியோருடன் அதே வீட்டின் மற்றொரு பகுதியில் வசித்து வருகின்றனர்.

    பாயேஸ் அலியின் அக்கா கணவர் அஜிஜூஸ் அடிக்கடி அவரின் வீட்டிற்கு வந்து சென்றதில் அருகில் வசித்து வந்த அமுதாவுடன் கள்ளதொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனை அறிந்த பாயேஸ் அலி இரண்டு நாட்களுக்கு முன்னர் அமுதா மற்றும் அவரது கணவரிடம் தட்டி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து இன்று மீண்டும் இருவரின் குடும்பத்தினருக்கிடையே வாய்தாகராறு ஏற்பட்டது.

    ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த ஆதிமூலம், அமுதா மற்றும் மகன் நித்திஸ் ஆகியோர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாயேஸ் அலியை சரமாரியாக குத்தியுள்ளனர்.

    இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த பாயேஸ் அலியை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து ஆதிமூலம் மற்றும் அவரது மனைவி அமுதா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரனை நடைபெறுகிறது.

    கொலைக்கு உடந்தையாக இருந்த அவர்களின் மகன் நித்திசை போலீசார் தேடி வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×