search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில்விபத்து காலங்களில் பயணிகளை எப்படி பாதுகாப்பாக மீட்பது குறித்த செயல்விளக்க ஒத்திகை நிகழ்ச்சி நடந்த காட்சி
    X
    ரெயில்விபத்து காலங்களில் பயணிகளை எப்படி பாதுகாப்பாக மீட்பது குறித்த செயல்விளக்க ஒத்திகை நிகழ்ச்சி நடந்த காட்சி

    ஈரோடு ரெயில்வே பணிமனையில் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் ஒத்திகை - மீட்புக்குழுவினர் செயல் விளக்கம்

    விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் ஒத்திகை நிகழ்ச்சி ஈரோடு ரெயில்வே பணிமனையில் நடந்தது. இதில் மீட்பு குழுவினர் செயல் விளக்கம் அளித்தனர்.
    ஈரோடு:

    ரெயில் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் ஒத்திகை நிகழ்ச்சி ஈரோடு ரெயில் நிலையம் அருகில் உள்ள பணிமனையில் நேற்று நடைபெற்றது. அரக்கோணத்தை சேர்ந்த மீட்பு குழுவினர் ஒத்திகையை சிறப்பாக செய்து காண்பித்தார்கள். இதையொட்டி மீட்பு கருவிகள் அங்கு தயாராக வைக்கப்பட்டு இருந்தன. மேலும், மருத்துவ குழுவினரும் தயாராக இருந்தார்கள்.

    ரெயில் விபத்தின்போது ஒரு பெட்டியின் மீது மற்றொரு பெட்டி மோதி நிற்பதை போல பணிமனை வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும், அந்த ரெயில் பெட்டிகளில் சிக்கி இருந்த பயணிகள் அபய குரல் எழுப்பினர். அவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் இறங்கினார்கள். ரெயில் பெட்டிக்குள் இறங்கிய மீட்பு குழுவினர், பயணிகளை கயிறு கட்டி மீட்டார்கள்.

    இந்த மீட்பு பணியில் நவீன கருவிகள் பயன்படுத்தப்பட்டன. அப்போது இடி பாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களை மீட்கும் வகையில் ரெயில் பெட்டியை துளையிட்டும், ஜன்னல் கம்பிகளை அறுத்து எடுத்தும் பயணிகள் மீட்கப்பட்டார்கள். அதன்பிறகு மீட்கப்பட்ட பயணிகள் மருத்துவ முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு பயணிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்வாறு ரெயில் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் ஒத்திகை நிகழ்ச்சியை மீட்பு குழுவினர் தத்ரூபமாக செய்து காண்பித்தனர்.

    இந்த ஒத்திகை நிகழ்ச்சியை சேலம் கோட்ட உதவி மேலாளர் அண்ணாதுரை பார்வையிட்டார்.

    Next Story
    ×