என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீக்கராஜபுரத்தில் துரைமுருகன் எம்.எல்.ஏ. வாக்கு சேகரித்த காட்சி.
    X
    சீக்கராஜபுரத்தில் துரைமுருகன் எம்.எல்.ஏ. வாக்கு சேகரித்த காட்சி.

    காட்பாடி தொகுதியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும் - துரைமுருகன் எம்.எல்.ஏ. வாக்குறுதி

    காட்பாடி தொகுதியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித்தரப்படும் என்று தி.மு.க.வேட்பாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. கூறினார்.
    வேலூர்:

    காட்பாடி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். காட்பாடி தொகுதி வாலாஜா மேற்கு ஒன்றியத்துக்குட்பட்ட சீக்கராஜபுரம், ஏகாம்பரநல்லூர், மருதம்பாக்கம், கத்தாரிகுப்பம், பள்ளேரி, கொண்டகுப்பம், முகுந்தராயபுரம், லாலாபேட்டை போன்ற பல்வேறு ஊராட்சி பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

    தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் காட்பாடி தொகுதியில் நான் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடுகிறேன். எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக தமிழகம் இருண்டு காணப்படுகிறது. இதற்கான விடிவு காலம் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஏற்படபோகும் ஆட்சி மாற்றமே.

    தி.மு.க. ஆட்சி அமைந்த உடன் தமிழகம் வளர்ச்சி பாதையில் செல்லும். சிப்காட் பகுதியில் பெல் நிறுவனத்திற்காக நிலம் கையகப்படுத்தப் பட்டவர்களின் குடும்பங்களில் ஒருசிலருக்கு வேலை வழங்கவில்லை. அவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தரப்படும். சிப்காட்டில் பல தொழிற்சாலைகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும். இதன் மூலம் உள்ளூர்பகுதி மக்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். தி.மு.க. ஆட்சி அமைந்த உடன் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். பிரசாரத்தின் போது அவருடன் வாலாஜா மேற்கு ஒன்றிய செயலாளர் சேஷா வெங்கட், ஒன்றிய பொறுப்பாளர்கள் அக்ராவரம் முருகன், செல்வம், காட்பாடி ஒன்றிய செயலாளர் சரவணன், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் உடன் சென்றனர்.

    துரைமுருகனுக்கு ஆதரவாக தி.மு.க. நிர்வாகிகள், முன்னாள் கவுன்சிலர்கள், பகுதி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் தனித்தனியே அந்தந்த பகுதி பொதுமக்களை சந்தித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    Next Story
    ×