என் மலர்
செய்திகள்

வாகன சோதனை
குஞ்சப்பனை சோதனை சாவடியில் ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.60 ஆயிரம் பறிமுதல்
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதனால் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோத்தகிரி:
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதனால் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள குஞ்சப்பனை சோதனைச்சாவடியில் நேற்று முன்தினம் மாலையில் பறக்கும் படை அலுவலர் முபாரக் தலைமையில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி ஊட்டி அருகே சின்ன குன்னூர் பகுதியை சேர்ந்த ராஜிவ் என்பவர் ரூ.60 ஆயிரம் கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து குன்னூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் பணம் ஒப்படைக்கப்பட்டது.
Next Story






