என் மலர்

  செய்திகள்

  தற்கொலை
  X
  தற்கொலை

  ஆண்டிபட்டி அருகே பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆங்கிலவழி கல்விமுறைக்கு பயந்து ஆண்டிபட்டியில் பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  ஆண்டிபட்டி:

  தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள முத்தனம்பட்டி தெற்குதெருவை சேர்ந்த ஈஸ்வரன் மகன் விஜயகுமார்(17). பிளஸ்-2 படித்து முடித்துள்ளார். இவருக்கு பார்மஸி படிப்பில் சேர்வதற்காக தர்மபுரியில் உள்ள ஒரு கல்லூரியில் அவரது தந்தை விண்ணப்பித்தார். ஆனால் தான் இதுவரை தமிழ்வழிக்கல்வியில் படித்து வந்ததால் ஆங்கிலவழிக்கல்வியில் கற்பது கடினம் என்று தனது தந்தையிடம் கூறினார்.

  அவரது தந்தை ஆறுதல் சொல்லி வந்தார். இருந்தபோதும் கடந்த சில நாட்களாக மிகுந்த சோகத்தில் இருந்த விஜயகுமார் நேற்று தனது வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து க.விலக்கு போலீசில் ஈஸ்வரன் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அசோக் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
  Next Story
  ×