என் மலர்tooltip icon

    செய்திகள்

    கல்லூரி மாணவ-மாணவியர்களுக்கு 2ஜிபி டேட்டா கார்டு வழங்கும் திட்டத்தை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கிவைத்தார்
    X
    கல்லூரி மாணவ-மாணவியர்களுக்கு 2ஜிபி டேட்டா கார்டு வழங்கும் திட்டத்தை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கிவைத்தார்

    24 ஆயிரத்து 986 மாணவர்களுக்கு 2 ஜிபி டேட்டா கார்டு வழங்கும் திட்டம் - அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்

    சிவகங்கை மாவட்டத்தில் 24 ஆயிரத்து 986 மாணவ, மாணவிகளுக்கு 2 ஜிபி டேட்டா கார்டு வழங்கும் திட்டத்தை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.
    சிவகங்கை:

    தமிழக அரசு அறிவித்த கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லாத 2 ஜிபி டேட்டா கார்டு வழங்கும் நிகழ்ச்சி சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. மானாமதுரை சட்டமன்ற உறுப்பினார் நாகராஜன் முன்னிலை வகித்தார். சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் ஹேமலதா அனைவரையும் வரவேற்று பேசினார்.

    கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா 2 ஜிபி டேட்டா கார்டு வழங்கி பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    எண்ணற்ற திட்டங்களை வழங்கி வந்த தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கல்லூரி மாணவ, மாணவிகளின் உயர்கல்விக்கு இணையதள வசதி மிக முக்கியமான ஒன்று. ஏழை எளியோர் வீட்டுப்பிள்ளை இதுபோன்ற பயன்பாட்டிற்கு மிகவும் கஷ்டப்படுவார்கள் என்பதை எண்ணி தமிழகத்திலுள்ள பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச 2 ஜிபி டேட்டா கார்டு வழங்க உத்தரவிட்டார்.

    இந்ததிட்டத்தினால் சிவகங்கை மாவட்டத்தில் அரசு கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, தனியார் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரியில் பயிலும் 24 ஆயிரத்து 986 மாணவ, மாணவிகளுக்கு 2 ஜிபி டேட்டா கார்டு வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மஞ்சுளாபாலசந்தர் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அழகப்பா பொறியியல் கல்லூரி முதல்வர் மலையாளமூர்த்தி நன்றி கூறினார்.
    Next Story
    ×