என் மலர்
செய்திகள்

கலெக்டர் கண்ணன்
விருதுநகரில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - கலெக்டர் தகவல்
விருதுநகரில் நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது என கலெக்டர் கண்ணன் கூறினார்.
விருதுநகர்:
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட அரசு சுகாதார இயக்கம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நாளை (வெள்ளிக்கிழமை) விருதுநகர் கே.வி.எஸ். நடுநிலைப்பள்ளியில் நடத்துகின்றனர்.
இந்த முகாம் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது. இதில் 50-க்கும் மேற்பட்ட தனியார் துறை வேலை அளிப்போர் கலந்துகொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இம்முகாமில் 8-ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரையிலும், பொறியியல் பட்டதாரிகள், டிப்ளமோ, ஐ.டி.ஐ. முடித்தவர்கள், நர்சிங், தையல் பயிற்சி, கணினி படிப்புகள், ஓட்டுனர் உரிமம் பெற்றவர்கள் போன்ற கல்வித்தகுதி உள்ள வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
இம்முகாமில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் தங்களுடைய சுய விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்துவிட்டு அனைத்து கல்வி சான்றிதழ் நகல்கள், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் தவறாது கலந்து கொள்ளலாம்.
முகாம் முற்றிலும் இலவசம் என்றும் கலெக்டர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும் முகாமில் பங்கேற்று ஆட்களை தேர்வு செய்ய விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் அதற்கான கோரிக்கை விண்ணப்பங்களை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் கல்வி வழிகாட்டும் மைய இணையதள முகவரியில் பதிவு செய்து கொண்டு பயன்பெறுமாறும் கலெக்டர் கண்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story






