search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில்வே நுழைவு பாலத்தின் தடுப்பு கம்பியில் மோதிய கண்டெய்னர் லாரியை படத்தில் காணலாம்.
    X
    ரெயில்வே நுழைவு பாலத்தின் தடுப்பு கம்பியில் மோதிய கண்டெய்னர் லாரியை படத்தில் காணலாம்.

    ரெயில்வே நுழைவு பாலத்தின் தடுப்பு கம்பியில் லாரி சிக்கியது - 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

    ரெயில்வே நுழைவு பாலத்தின் தடுப்பு கம்பியில் லாரி சிக்கியதால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    மொடக்குறிச்சி:

    ஈரோடு-கரூர் மெயின்ரோட்டில் மொடக்குறிச்சி பஞ்சலிங்கபுரம் அருகே ஆரியன் காட்டுப்புதூர் என்ற இடத்தில் ெரயில்வே நுழைவு பாலம் உள்ளது. அதிக உயரத்தில் பாரம் ஏற்றிக்கொண்டு வரும் லாாிகள் நுழைவு பாலத்தில் மாட்டிக்கொள்வதால் பாலத்துக்கு முன்பாக இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் தூத்துக்குடியில் இருந்து ஈரோடு நோக்கி சிமெண்டு் லோடு ஏற்றிக்கொண்டு ஒரு கண்டெய்னர் லாரி வந்தது. இந்த லாரி ஆரியன் காட்டுப்புதூர் நுழைவு வாயிலை கடந்தபோது இரும்பு தடுப்பு கம்பிக்குள் சிக்கிக்கொண்டது. இதனால் லாாியை மேற்கொண்டு டிரைவரால் இயக்க முடியவில்லை.

    லாரி நடுரோட்டிலேயே நின்றதால் இருபுறமும் எந்த வாகனங்களும் செல்ல முடியாமல் வரிசையாக நின்றன. இதுபற்றி தகவல் கிடைத்ததும் மொடக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றார்கள். வரிசையில் நின்ற வாகனங்களை மாற்று பாதையில் திருப்பி விட்டார்கள். பின்னர் இரும்பு தடுப்பு கம்பிகள் உடைத்து லாரியை வெளியே கொண்டு வந்தார்கள். இந்த பணி முடியும்போது மாலை 6 மணி ஆகிவிட்டது. இதனால் ஈரோடு கரூர் மெயின்ரோட்டில் சுமார் 4 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்த விபத்து குறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×