search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஸ்டேக்
    X
    பாஸ்டேக்

    மாதந்தோறும் பணம் செலுத்தி பாஸ்டேக் முறைக்கு மாறிய அரசு பஸ்கள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் தவிர மற்ற 7 போக்குவரத்து கழகங்கள் பாஸ்டேக் ஸ்டிக்கர்களை பயன்படுத்த தொடங்கி விட்டன.
    சென்னை:

    நாடு முழுவதும் பாஸ்டேக் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படுகிறது. இதைதொடர்ந்து தமிழகத்தில் அனைத்து வாகனங்களும் பாஸ்டேக் முறைக்கு மாற்றப்பட்டு வருகின்றன. பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டப்படும் வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நிற்காமல் செல்ல முடியும்.

    பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டாத வாகனங்களுக்கு இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து வாகன உரிமையாளர்கள், வாடகைதாரர்கள், பாஸ்டேக் திட்டத்திற்கு மாறி வருகிறார்கள்.

    தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சுமார் 22 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. கொரோனா தொற்று பரவல் காரணமாக பஸ்கள் முழுமையாக இன்னும் இயக்கப்படவில்லை.

    ஆனாலும் இந்த பாஸ்டேக் திட்டத்திற்கு அரசு பஸ்கள் மாற்றப்பட்டுள்ளன. 8 போக்குவரத்து கழகங்கள் உள்ளன. இதில் சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் தவிர மற்ற 7 போக்குவரத்து கழகங்கள் பாஸ்டேக் ஸ்டிக்கர்களை பயன்படுத்த தொடங்கி விட்டன.

    அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் அனைத்தும் இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான தொகை மாத அடிப்படையில் கணக்கிடப்பட்டு மொத்தமாக வழங்கப்படுகிறது.

    மற்ற போக்குவரத்துகழகங்களும் இந்த முறையை பின்பற்றி பஸ்களை இயக்குகின்றன. விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் 3,000 பஸ்கள் உள்ளன. இதில் 2,500 பஸ்களுக்கு ஸ்டிக்கர் பெறப்பட்டுள்ளது.

    நாள் ஒன்றுக்கு எத்தனை டிரிப் சுங்கச்சாவடிகளை பஸ் கடந்து செல்கிறது என்பதை கணக்கிட்டு அதற்கான தொகை முன்னதாக கொடுக்கப்படுகிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    தனியார் வாகனங்களை போல அரசு வாகனங்களும் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இயக்கப்படுகிறது. அரசு பஸ்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படுவது இல்லை.

    ஒரு பஸ் மாதத்திற்கு 60 டிரிப் செல்கிறது என்றால், அதற்கு 50 டிரிப்புக்கு மட்டும் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டப்படுவதால் அரசு பஸ்கள் சுங்கச்சாவடிகளில் காத்து நிற்காமல் எளிதாக கடந்து செல்கிறது.

    விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மூலம் பாஸ்டேக் கட்டணம் செலுத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.


    Next Story
    ×