என் மலர்
செய்திகள்

புதுக்கோட்டை பகுதியில் வைக்கப்பட்டுள்ள பேனர்.
புதுக்கோட்டை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 24-வது ஆண்டாக பதிவு மூப்பை புதுப்பித்த வாலிபர்
புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த வாலிபர் தொடர்ந்து 24-வது ஆண்டாக தனது பதிவு மூப்பை புதுப்பித்துள்ளார். இவருக்கு இதுநாள் வரை எந்த ஒரு வேலைக்காக அழைப்பு கடிதமும், நலம் விசாரித்து கூட கடிதமும் வரவில்லையாம்.
புதுக்கோட்டை:
அரசு வேலை என்பது அனைவரின் கனவு. ஆனால் அதனை பெற இன்று பல்வேறு போட்டிகளையும், தேர்வுகளையும் எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு வேலை வாய்ப்பை பெறுவதற்கான முன்னுரிமையை பெற்றுத்தருவது பதிவு மூப்பு எனும் வேலைவாய்ப்பு பதிவு தான்.
படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் ஒவ்வொருவரும் தங்களது கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வைத்திருந்தால் அரசு வேலை நம்முடைய வீட்டின் வாசல் கதவை எப்போது வேண்டுமானாலும் தட்டலாம் என்பது நம்பிக்கை.
வேலை தேடும் வேளையில் அதற்காக எத்தனையோ முயற்சிகளை மேற்கொள்ளலாம். போட்டித் தேர்வுகளில் பங்கேற்கலாம். அதில் நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்று நேர்காணலுக்கும் செல்லலாம். அப்போது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்த பதிவு மூப்பு பட்டியலில் நமது பெயரும் இருந்தால் அதற்கான முன்னுரிமையுடன் அரசு பணியை பெற முடியும்.
குறிப்பிட்ட சில பணிகளுக்கு நேரடியாகவே வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பதிவு மூப்பு பட்டியலில் இருந்து ஆட்கள் நியமனம் செய்யப்படுவதும் உண்டு.
தொழில்நுட்ப மாற்றங்களுக்கேற்ப இணையதளம் வழியாகவும் செயல்படுகிறது. நேரடியாக வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று காத்திருந்து பதிவு செய்யும் நிலையை இது மாற்றியுள்ளது. தற்போது வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை 68 லட்சத்தை தாண்டியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதில் 11,35,866 பேர் 57 வயது வரையில் உள்ள பதிவுதாரர்கள் ஆவர். எல்லாவற்றுக்கும் மேலாக 7 ஆயிரத்து 648 பேர் 58 வயதுக்கு மேல் உள்ளவர்கள் ஆவர்.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த ஆனந்தராஜ் தொடர்ந்து 24-வது ஆண்டாக தனது பதிவு மூப்பை புதுப்பித்துள்ளார். இவருக்கு இதுநாள் வரை எந்த ஒரு வேலைக்காக அழைப்பு கடிதமும், நலம் விசாரித்து கூட கடிதமும் வரவில்லையாம். இதனால் தனது புதுப்பித்தலை பேனராகவும், போஸ்டராகவும் அச்சடித்து புதுக்கோட்டை நகர் முழுவதும் ஒட்டியுள்ளார். இந்த போஸ்டரை பொது மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கிறார்கள்.
இது குறித்து இளைஞர் ஒருவர் கூறும் போது, தொழில் நுட்பங்கள் எவ்வளவு தான் வளர்ந்தாலும் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு அவற்றை மட்டும் நம்பி இருக்காமல் சுயமாக தொழில் தொடங்க வேண்டும். சுய தொழிலுக்கு அரசு எண்ணற்ற திட்டங்களை வகுத்துள்ளதுடன் அதற்கு தேவையான மானியத்துடன் கடன்களையும் வழங்கி வருகிறது என்றார்.

Next Story