என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வேலூரில் இளம்பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை - ஆட்டோ டிரைவர் கைது

    வேலூரில் இளம்பெண்ணை வரதட்சணையாக பணம் வாங்கி வரும்படி அடிக்கடி துன்புறுத்தி வந்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    வேலூர்:

    வேலூர் தோட்டப்பாளையம் சோளாபுரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நரேஷ் (வயது 26), ஆட்டோ டிரைவர். இவரும் வேலூர் ரங்கசாமி நகரை சேர்ந்த துர்காதேவியும் (20) காதலித்து வந்தனர். அவர்கள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு நரேஷ் மற்றும் அவருடைய அம்மா லலிதா ஆகியோர் துர்காதேவியிடம், பெற்றோர் வீட்டில் இருந்து வரதட்சணையாக பணம் வாங்கி வரும்படி அடிக்கடி துன்புறுத்தி வந்தனராம். நரேசின் மாமா மகேஷ் தகாத வார்த்தைகளால் துர்காதேவியை திட்டி, அவரின் செல்போனை பறித்து உடைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது., மேலும் 3 பேரும் சேர்ந்து துர்காதேவியை வீட்டை விட்டு விரட்டியுள்ளனர்.

    இதுகுறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் துர்காதேவி புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்குப்பதிந்து நரேசை கைது செய்தார். மேலும் இதில் தொடர்புடைய லலிதா, மகேஷ் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×