என் மலர்
செய்திகள்

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதாவுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்ட போது எடுத்த படம்.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கலெக்டர் லலிதா
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கலெக்டர் லலிதா, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். அப்போது அவர் யாரும் அச்சப்பட தேவையில்லை என அறிவுறுத்தினார்.
மயிலாடுதுறை:
தமிழகம் முழுவதும் கட்ந்த மாதம் (ஜனவரி) 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் தொடங்கப்பட்டு, முதற்கட்டமாக முன் கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை மாவட்ட கலெக்டர் லலிதா போட்டு் கொண்டார்.
தொடர்ந்து வருவாய்த்துறை பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் லலிதா, நிருபர்களிடம் கூறுகையில், இதுவரை தடுப்பூசி போட்டுக் கொண்ட யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. எனவே பொதுமக்கள் அச்சப்படாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவுறுத்தினார்.
Next Story






