என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
மணல்மேடு அருகே விஷம் தின்ற கல்லூரி மாணவி பலி
மணல்மேடு அருகே விஷம் தின்ற கல்லூரி மாணவி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணல்மேடு:
மணல்மேடு அடுத்த சேத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குணசேகரன் மகள் சினேகா(வயது 18). இவர் ஒரு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த சில மாதங்களாக சினேகா வயிற்று வலியால் அவதிபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று அவருக்கு மீண்டும் வயிற்று வலி வந்துள்ளது. இதில் மனமுடைந்த சினேகா வீட்டில் யாரும் இல்லாத நிலையில் எலி மருந்தை(விஷம்) தின்று மயங்கி விழுந்தார்.
பின்னர் வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்த சினேகாவின் பெற்றோர், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சினேகாவை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சினேகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இருந்தார். இதுகுறித்து மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






