என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஹரியானா ஓட்டலில் சாப்பிட்ட 2 நீலகிரி டிரைவர்கள் சுருண்டு விழுந்து பலி

    பாக்குலோடு ஏற்றி டெல்லி சென்றபோது ஹரியானா ஓட்டலில் சாப்பிட்ட 2 நீலகிரி டிரைவர்கள் சுருண்டு விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் இருந்து கடந்த வாரம் 2 சரக்கு லாரியில் பாக்கு ஏற்றிக்கொண்டு பொன்ராஜ் (வயது 39), நிஷித் (21) ஆகியோர் டெல்லிக்கு புறப்பட்டனர்.

    ஹரியானா அருகே உள்ள ஓட்டலில் கடந்த 30-ந்தேதி இரவு சாப்பிட்டனர். பின்னர் அங்குள்ள அறையில் ஓய்வு எடுத்தனர். சாப்பிட்ட சிறிது நேரத்தில் 2 பேருக்கும் கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. வலியால் அலறித்துடித்த 2 பேரும் மயங்கினர். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து 2 பேரும் உயிரிழந்தனர். இது குறித்து அவர்களது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. 2 டிரைவர்கள் பலியான சம்பவம் அவர்களது குடும்பம் மற்றும் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. இது குறித்து ஹரியானா போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டல் உணவில் நஞ்சு கலந்திருந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    Next Story
    ×