என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஓசூரில் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

    ஓசூரில், தமிழ் தேச குடியரசு இயக்கம் சார்பில், பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    ஓசூர்:

    ஓசூரில், தமிழ் தேச குடியரசு இயக்கம் சார்பில், பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓசூர் ராம்நகர் அண்ணா சிலையருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மைய பொறுப்பாளர் தமிழரசன் தலைமை தாங்கினார். ராமமூர்த்தி வரவேற்றார். 

    இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஓசூர் தொகுதி செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட தி.க. தலைவர் வனவேந்தன், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்ட தலைவர் முகமது கலீல், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட துணைத்தலைவர் ஷாநவாஸ் உள்பட பலர் பேசினார்கள். முடிவில், விக்னேஷ் நன்றி கூறினார்.

    Next Story
    ×