என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
போரூர் அருகே போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை - பணியிட மாற்றம் செய்யப்பட்ட 3 நாளில் பரிதாபம்
போரூர் அருகே டெல்லியில் இருந்து சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட 3 நாளில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பூந்தமல்லி:
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தாலுகாவை சேர்ந்தவர் ஆல்பர்ட் (வயது 26). இவர் 2016-ம் ஆண்டு போலீஸ் பணிக்கு சேர்ந்தார். தற்போது தனது பெற்றோருடன் போரூரை அடுத்த முகலிவாக்கம், ஏ.ஜி.எஸ். காலனியில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த அவரை உறவினர்கள் தொடர்பு கொண்டும் செல்போனை எடுக்காததால் அவரது உறவினர்கள் சந்தேகமடைந்து வீட்டுக்கு வந்து பார்த்தனர்.
இது குறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த மாங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன், ஆல்பர்ட் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
டெல்லியில் 8-வது சிறப்பு காவல் படையில் பணிபுரிந்து வந்த ஆல்பர்ட் கடந்த 3 நாட்களுக்கு முன் சென்னை ஆவடியில் உள்ள 5-வது சிறப்பு காவல் படைக்கு மாற்றப்பட்டுள்ளார். பெற்றோர் சொந்த ஊருக்கு சென்று விட்டதால் ஆல்பர்ட் மட்டும் வீட்டில் இருந்தார். நேற்று முன்தினம் காலை அவர் பணிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆவடியில் உள்ள அதிகாரி ஆல்பர்ட்டை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது பணிக்கு வரவில்லை என்று கூறியுள்ளார் என்பதும் மீண்டும் பணிக்கு வரும்போது உயர் அதிகாரியை பார்த்து விட்டு வருமாறு கூறியதாகவும் தெரிகிறது. இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணமா? என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






