என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
வெளிமாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு வர இ-பாஸ் ரத்து
வெளிமாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு வர இ-பாஸ் எடுக்கும் நடைமுறை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
ஊட்டி:
கொரோனா பரவலை தடுக்க வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் எடுத்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர். எனினும் ஊரடங்கு தளர்வால் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இ-பாஸ் பெற்று சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வந்து சென்றனர். எனினும் சிலருக்கு இ-பாஸ் எடுக்க தெரியாததால்அவதி அடைந்தனர். மேலும் பண்டிகை காலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததால், சோதனைச்சாவடிகளில் இ-பாஸ் சோதனைக்காக வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையொட்டி தற்போது இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டு உள்ளது. சமீபத்தில் ஊட்டியில் இருந்து சென்னை, நாகர்கோவில், செங்கோட்டை ஆகிய இடங்களுக்கு தமிழக அரசின் அதிவிரைவு பஸ்கள் இயக்கம் தொடங்கியது. இதை கருத்தில் கொண்டு இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இதனால் பர்லியார், குஞ்சப்பனை சோதனைச்சாவடிகள் வழியாக வருபவர்களிடம் இ-பாஸ் சோதனை செய்யப்படவில்லை. தமிழகத்தில் நீலகிரியில் மட்டும் தான் இ-பாஸ் முறை ஊரடங்கு தளர்த்தப்பட்டும் தொடர்ந்து அமலில் இருந்தது. தற்போது இங்கும் ரத்து செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story






