search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பணிமனைக்குள் நடந்து சென்றபோது அரசு பஸ் மோதி டிரைவர் பலி

    பணிமனைக்குள் நடந்து சென்றபோது அரசு பஸ் மோதி டிரைவர் இறந்தார். விபத்தை ஏற்படுத்தியதாக மற்றொரு டிரைவர் கைது செய்யப்பட்டார்.
    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் சக்தி நகரை சேர்ந்தவர் பக்தவச்சலம் (வயது 57). அந்தியூர் கரட்டுப்பாளையத்தில் உள்ள பணிமனையில் அரசு பஸ்களை சுத்தம் செய்ய கொண்டு செல்லும் டிரைவராக வேலை பார்த்து வந்தார். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு பக்தவச்சலம் பணிமனையில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். இந்தநிலையில் பொள்ளாச்சியில் இருந்து அந்தியூருக்கு வந்த அரசு பஸ் ஒன்று பஸ்நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்ட பின்னர், டீசல் பிடிப்பதற்காக பணிமனைக்கு வந்தது. பஸ்சை அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசத்தை சேர்ந்த ராஜா (58) என்பவர் ஓட்டினார்.

    அப்போது பணிமனைக்குள் நடந்து சென்றுகொண்டு இருந்த பக்தவச்சலம் மீது ராஜா ஓட்டிவந்த பஸ் மோதிவிட்டதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த பக்தவச்சலத்தை அருகே இருந்த ஊழியர்கள் மீட்டு உடனே அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அதே பஸ்சில் கொண்டு சென்றார்கள். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் நள்ளிரவு 12.30 மணி அளவில் பக்தவச்சலம் இறந்துவிட்டார்.

    இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தியதாக அரசு பஸ் டிரைவர் ராஜாவை கைது செய்துள்ளார்கள்.

    விபத்தில் இறந்த பக்தவச்சலத்துக்கு சம்பூர்ணம் என்ற மனைவியும், ஸ்ரீதர் என்ற மகனும், லதா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் பக்தவச்சலத்தின் உடலை பார்த்து கதறி துடித்தது காண்பவர்களையும் கண்கலங்க செய்தது.

    Next Story
    ×