search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா
    X
    நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா

    பந்தய குதிரைகளை சவாரிக்கு பயன்படுத்த கூடாது- கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவு

    நீலகிரி மாவட்டத்தில் பந்தய குதிரைகளை சவாரிக்கு பயன்படுத்த கூடாது என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டு உள்ளார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி தலைசிறந்த சுற்றுலா நகரமாக உள்ளது. இங்கு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்து குதிரை சவாரி நடத்தப்பட்டு வருகிறது. ஊட்டிக்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணி கள் தங்களது குழந்தைகளுடன் குதிரை சவாரி செய்து மகிழ்கிறார்கள். சீசன் காலமான ஏப்ரல், மே மற்றும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகுிய காலத்தில் குதிரைகளை சவாரிக்கு பயன்படுத்திய பின்னர் அவற்றை கவனிக்காமல் சாலையில் திரிய விடுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்ட உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் சுற்றி திரியும் குதிரைகள், சவாரிக்கு பயன்படுத்தப் படுவது ஆகும். எனவே அனைத்து குதிரைகளை வருகிற 10-ந் தேதிக்குள் அரசு கால்நடை மருத்துவமனையில் பதிவு செய்து சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் ரூ.250 செலுத்தி மைக்ரோ சிப் பொறுத்திக்கொள்ள வேண்டும்.

    குதிரை சவாரிக்கு மார்வாரி கத்தியவாடி இளம் குதிரை மட்டும் பயன்படுத்த வேண்டும். பந்தய குதிரைகளை பயன்படுத்தும்போது அது வேகமாக செல்லும். இதனால் சவாரி செல்பவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே பந்தய குதிரைகளை சவாரிக்கு பயன்படுத்தகூடாது. குதிரை பதிவு செய்யாமல் இருந்தாலோ, பதிவு செய்த குதிரைகளை சாலையில் திரிய விட்டலோ முதற்கட்டமாக ரூ.1000-மும், 2-வது கட்டமாக ரூ.2 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும். அதற்கு மேலும் திரியவிட்டால் அந்த குதிரைகளை பிராணிவதை தடுப்பு சங்கம் பிடித்து செல்லும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×