என் மலர்

  செய்திகள்

  கோப்புப் படம்
  X
  கோப்புப் படம்

  சென்னை லலிதா ஜுவல்லரி கடையில் 5 கிலோ தங்கம் திருட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை தியாகராய நகரில் உள்ள லலிதா ஜுவல்லரியில் 5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.
  சென்னை:

  சென்னை தியாகராய நகரில் உள்ள லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் 5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. 

  இதுபற்றி தெரிய வந்ததும் கடையில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தபொழுது, கடை ஊழியர் ஒருவர் திருட்டு செயலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது என கூறப்படுகிறது.

  கடையில் கடந்த 8 ஆண்டுகளாக வேலைப்பார்த்து வந்த ராஜஸ்தானை சேர்ந்த அந்த ஊழியர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. தப்பிச்சென்ற ஊழியர் கையில் பையை மறைத்து எடுத்துச் செல்லும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியானதால் புகார் அளிக்கப்பட்டது.

  நகைக்கடை மேலாளர் அளித்துள்ள புகாரின் பேரில், தப்பியோடிய கடை ஊழியரை தேடும் பணியில் தேனாம்பேட்டை சரகத்திற்கு உட்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
  Next Story
  ×