search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மது விற்பனை
    X
    மது விற்பனை

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.15½ கோடிக்கு மதுபானம் விற்பனை

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 நாட்களில் ரூ.15½ கோடிக்கு மதுபானம் விற்பனை ஆனது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் டாஸ்மாக் மூலம் 218 கடைகள் செயல்பட்டு வருகிறது. இக்கடைகள் மூலம் வழக்கமாக ஒரு நாளைக்கு சுமார் ரூ.3 கோடியே 30 லட்சம் மதிப்பில் மதுபானம் விற்பனை நடைபெறும்.

    இந்த நிலையில் பொங்கலன்று ரூ.9 கோடியே 89 லட்சத்து 4 ஆயிரத்து 330 மதிப்பில் மதுபானம் விற்பனை நடைபெற்றுள்ளது.

    அதாவது வழக்கத்தை விட நேற்றுமுன்தினம் ஒரு நாளில் 3 மடங்கு மதுபானம் விற்பனை ஆகியுள்ளது.

    நேற்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மதுக்கடைகள் மூடப்பட்டன. இதனால் மது பிரியர்கள் ஒரு நாளைக்கு முன்பே மதுபானங்களை வாங்கி இருக்கலாம். அதனால் மதுபான விற்பனை அதிகரித்துள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அதேபோல் பொங்கலுக்கு முந்தைய நாளான போகி பண்டிகை அன்று ரூ. 5 கோடியே 60 லட்சம் மதிப்பில் மதுபானங்கள் விற்பனையானதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×