என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெருந்துறை வாரச்சந்தைக்கு விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட தேங்காய்களை படத்தில் காணலாம்.
    X
    பெருந்துறை வாரச்சந்தைக்கு விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட தேங்காய்களை படத்தில் காணலாம்.

    பெருந்துறை வாரச்சந்தையில் ரூ.17 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை

    பெருந்துறை வாரச்சந்தை நேற்று நடைபெற்றது. இந்த சந்தையில் ரூ.17 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை ஆனது.
    பெருந்துறை:

    பெருந்துறை வாரச்சந்தை நேற்று நடைபெற்றது. இந்த சந்தைக்கு கோபி, கள்ளிப்பட்டி, கொளப்பலூர், அத்தாணி, பங்களாப்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் ஒரு லட்சம் தேங்காய்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

    இதில் முதல் தரம் தேங்காய் ஒன்று ரூ.18 முதல் ரூ.20 வரையும், 2-ம் தரம் தேங்காய் ஒன்று ரூ.16 முதல் ரூ.18 வரையும், 3-ம் தரம் தேங்காய் ஒன்று ரூ.14 முதல் ரூ.16 வரையும் விற்பனை ஆனது.

    தேங்காய்கள் மொத்தம் ரூ.17 லட்சத்துக்கு விற்பனை ஆனதாக சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    தேங்காய்களை சேலம், மேட்டூர், சங்ககிரி, எடப்பாடி, ஆத்தூர் மற்றும் ஊத்துக்குளி, சென்னிமலை, காங்கேயம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் வாங்கி சென்றனர்.
    Next Story
    ×