என் மலர்
செய்திகள்

காட்டு யானைக்கு சிகிச்சை
காயம் அடைந்த காட்டு யானைக்கு சிகிச்சை
கும்கிகள் உதவியுடன், காயம் அடைந்த காட்டு யானையை சுற்றி வளைத்து பின்னர் அதற்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட (வெளி மண்டலம்) மசினகுடி உள்பட பல இடங்களில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை முதுகு பகுதியில் காயத்துடன் சுற்றியது. அவ்வப்போது ஊருக்குள் புகுந்தும் அட்டகாசத்தில் ஈடுபட்டது. அந்த யானை மசினகுடி அருகே உள்ள பொக்காபுரம் பகுதியில் நின்றது. இதையறிந்ததும் முதுமலை தெப்பக்காட்டில் இருந்து கும்கிகள் வசீம், சுஜய், முதுமலை, சீனிவாஸ், மூர்த்தி ஆகிய யானைகள் வரவழைக்கப்பட்டன.
பின்னர் அந்த கும்கிகள் உதவியுடன், காயம் அடைந்த காட்டு யானையை சுற்றி வளைத்தனர். பின்னர் அதற்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்தப்பகுதியிலேயே காட்டு யானையின் கால்கள் மரத்தில் இழுத்து கட்டப்பட்டன. அத்துடன் பாதுகாப்புக்காக யானையை சுற்றிலும் கும்கிகள் நின்றிருந்தன. தொடர்ந்து கால்நடை மருத்துவ குழுவினர் காட்டு யானையின் முதுகு பகுதியில் சீழ் வடிந்த நிலையில் இருந்த காயத்தை சுத்தம் செய்து சிகிச்சை அளித்தனர்.
பிறகு அந்த யானைக்கு மயக்கம் தெளிய ஊசி போடப்பட்டு, கால்களில் கட்டப்பட்ட கயிறுகளை அவிழ்த்துவிட்டனர். தொடர்ந்து அந்த யானைக்கு கரும்பு உள்ளிட்ட உணவுகளும் கொடுக்கப்பட்டன. அவற்றை சாப்பிட்டவாறு அந்த யானை சற்றுதூரம் சென்றது. தொடர்ந்து அந்த காட்டு யானையை வனத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.

Next Story