என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஈரோடு அருகே கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

    தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    ஈரோடு:

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இலவச குடியிருப்பு வழங்க வேண்டும். குடியிருப்பில் உள்ள பழுதுகளை நீக்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில பொதுச்செயலாளர் உஷாராணி தலைமை தாங்கினார். இதில் மாநில தலைவர் செந்தாமலர் உள்பட கிராம சுகாதார செவிலியர்கள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
    Next Story
    ×